வெட்கித் தலைகுனியுங்கள் தமிழர்களே.! மொத்த தமிழகத்தையும் அதிரவைத்த ஒற்றை போஸ்டர்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் மோசமான கலாச்சாரம் 'அடல்ட்' திரைப்படங்கள் அதிகளவில் வெளியாக தொடங்கியுள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ''திரிஷா இல்லனா நயன்தாரா'' மற்றும் ''ஹரஹர மகாதேவகி'', ''இருட்டு அறையில் முரட்டு குத்து'' போன்ற திரைப்படங்கள் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் அதிகப்படியான இரட்டை அர்த்தங்களை கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் ஆகும்.

இதனை தொடர்ந்து அடல்ட் திரைப்படங்கள் அதிகளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் விரைவில் வெளிவர உள்ள ஒரு திரைப்படம் ''90 எம் எல்''. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில்., நடிகை ஓவியா சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, குடித்துவிட்டு ஆட்டம் ஆடுவது மற்றும் அந்த மாதிரியான விஷயங்களை வெளிப்படையாகவே தோழிகளுடன் பகிர்ந்து கொள்வது என்ற காட்சிகள் இருந்தது.

இந்த திரைப்படத்தின் டிரைலருக்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில்., சமூக வலைதளங்களில் ஓவியா ஆர்மி (ராணுவம்) என்று இருந்த ரசிகர்கள் ஓவியாவின் செயலுக்கு கழுவி கழுவி திட்டி தீர்த்து வருகின்றனர். இப்படியே தமிழ் திரையுலகம் சென்று கொண்டு இருந்தால்., தமிழ் திரைப்படங்களில் ஆபாசங்களுக்கு பஞ்சமில்லாத வகையில்., படத்தின் துவக்கத்தின் போதே 18 வயதுக்கு மேற்பட்டவர் மட்டும் பார்க்கக் கூடியது என்று வரக்கூடும்.

அந்த வகையில்., சென்னை முழுவதும் தற்போது "_________ போட ஒரு பெண் வேண்டும்" என்ற சுவரொட்டிகளானது அதிகளவில் நேற்று இரவு இருந்துள்ளது. இந்த சுவரொட்டிகளை யார் ஓட்டினார்கள் என்ற தகவல் கிடைக்காத நிலையில்., காதல் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான நபர் செய்த வேலையாக கூட இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இந்த நிலையில்., இந்த போஸ்டரானது கடலை போட பொண்ணு தேவை என்ற படத்தின் தலைப்பு என்ற தகவலானது வெளியாகியுள்ளது. 

தமிழ் சமுதாயம் தமிழ்க் கலாச்சாரம் இதனை அனைத்தும் மறந்து ஆபாச சிந்தனையில் தள்ளப்பட்டு, வருங்கால சந்ததிகள் என்று சொல்லக்கூடிய இளைஞர்கள், பள்ளி மாணவர்களின் மனநிலை கெட்டுப் போகக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ள, சர்ச்சைக்குரிய வசனங்கள் இருக்கும் திரைப்படங்களுக்கு, திரைப்படத்துறையினரைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Chennai area a wall poster will create problem lovers day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->