தொடங்கியது விஸ்வாசம் திருவிழா! "அடிச்சிதூக்கு" பாடல் வெளியீடு!! - Seithipunal
Seithipunal


விஸ்வாசம் படத்தின் பாடல் ஒன்று சற்றுமுன் வெளியானது.

நடிகர் அஜித்குமார், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார். 

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது. பாடலை LahariMusic  வெளியிடுகிறது. 


 
இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு என பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. அதன்படி சற்றும் முன் பாடல் வெளியானது.   

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here’s the first single of Viswasam AdchiThooku


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->