தலைவணங்குகிறோம் ராகவா லாரன்ஸ் சார்.!! முடிந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள், இல்லையேல் பகிருங்கள் மக்களே.!! - Seithipunal
Seithipunal


தற்போதுள்ள பிரபல நடன இயக்குநர் மற்றும் நடிகருமான ராகவா லாரன்ஸ் காஞ்சனா, முனி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து கலக்கியவர். இவர் தன் நடன திறமையால் தமிழக மக்களை அதிகம் ஈர்த்தவர். அதுமட்டுமின்றி சமூக சேவையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மாற்றுத்திறனாளிகளுக்கு நடன பயிற்சி அளித்து  அவர்களையும்  தனது திரைப்பட பாடலுக்கு நடனம் ஆட வைப்பார்.

அதுமட்டுமின்றி  இவர் பெயரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனம் சார்பில் இதுவரை பல குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்பொது அந்த தொண்டு நிறுவனம் 146 வது இருதய அறுவை சிகிச்சையை சத்தமில்லாமல்  வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. மோனிஷா என்ற அந்த சிறு குழந்தைக்கு தான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு  இருதயத்தில் ஓட்டை இருந்ததால் இருதய அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அந்த குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலையில் இருந்தது.

அதன் பின்  ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனம் பற்றி தெரிந்துகொண்ட குழந்தையின் பெற்றோர் அந்த தொண்டு நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினார். அதன் பின்  மோனிஷாவுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்பொது அவர் உடல் நலம் நன்கு தேறி வருகிறார்.

இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபோல் குழந்தைகள் வீட்டில் இருந்தால் உடனடியாக ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனத்திற்கு தகவல் கூறலாம் என தொண்டு நிறுவனத்தின் தொலைபேசி எண்களை  ராகவா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hatesoff ragava lawarence sir


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->