சர்ச்சையை கிளப்பிய ஜிவி பிரகாஷ் பட போஸ்டர், மோடியை கிண்டல் செய்ததாக கொந்தளித்து போன பாஜகவினர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வாட்ச்மேன். இப்படத்தில்  யோகி பாபு, ராஜ் அர்ஜூன் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் வாட்ச்மேன் படம் வரும் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்தப் போஸ்டரில் நாய் வாயில், ஒரு அட்டையை வைத்திருப்பது போன்றும், அதில், நானும் சவுக்கிதார் தான் என்ற வாசகமும் ஆங்கிலத்தில் இருப்பது போன்று அமைந்துள்ளது.



பிரதமர் மோடி சமீபத்தில் தனது டுவிட்டரில் சவுக்கிதார் (காவலாளி) நரேந்திர மோடி என பெயரை மாற்றினார். 

இதை தொடர்ந்து பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, பியூஷ் கோயல், ஜே.பி. நட்டா, ஹர்ச வர்த்தன், தர்மேந்திர பிரதான், தமிழிசை சௌந்தராஜன், ஹெச். ராஜா ஆகியோர் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சவுகிதார்(காவலாளி) என்ற பெயரை சேர்த்தனர்.

இந்நிலையில் வெளியான வாட்ச்மேன் பட போஸ்டர் பாஜகவை கிண்டல் செய்யும் வகையில் உள்ளதாக பெரும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. இந்த போஸ்டருக்கு பா.ஜனதா தொடர்கள் சமூகவலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gv prakash movie poster make controvarsy


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->