நடிகர் விஜய்யின் தங்கைக்கு இப்படியொரு துயரமா? பண உதவி கேட்டு கதறும் குடும்பத்தார்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கையாகவும், சூர்யாவிற்கு காதலியாகவும் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. 

கன்னட நடிகையான இவர் கன்னட மொழிகளில் மட்டுமின்றி தமிழிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

                       
மேலும் இவர் இறுதியாக ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் திரைப்படத்தில் அவருக்கு அண்ணியாக நடித்துள்ளார். மேலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில் விஜயலட்சுமியின் அம்மா உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதனை தொடர்ந்து தற்பொழுது நடிகை விஜயலட்சுமி உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலம் பெருமளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                  

இந்நிலையில் விஜயலட்சுமி சகோதரி செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் இருந்த பணத்தை எல்லாம் எங்கள் அம்மாவின் சிகிச்சைக்கு செலவு செய்து விட்டோம். மேலும் தற்போது விஜயலட்சுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க உரிய பணம் இல்லாததால் நாங்கள் அவதிப்பட்டு வருகிறோம் இந்நிலையில் அவருக்கு சினிமாத்துறையினர் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வேண்டியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

friends movie vijay sister vijayalakshmi suffered by money in hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->