தல தயாரிப்பில் தளபதி நடிக்க போகும் திரைப்படம்! விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்! - Seithipunal
Seithipunal


தோனி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கப் போகும் முதல் தமிழ் திரைப்படம்! 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்பொழுது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். இது மட்டுமின்றி அவர் மதுபானம், ஆடைகள் தயாரிப்பு, விவசாயம் என பல தொழில்களை செய்து வருகிறார். தோனி எண்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் ஹிந்தி படங்களையும் அவர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில் இதுவரை மூன்று திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. சிஎஸ்கே அணி இரண்டு வருட தடைக்கு பிறகு மீண்டும் வந்தது குறித்த ஒரு திரைப்படமும், உலக கோப்பையை வென்றது குறித்த ஆவண படத்தையும், ஒரு தில்லர் படத்தையும் ஹிந்தியில் தயாரித்துள்ளார்.  

இந்த நிலையில் தோனி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ் திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதற்காக தமிழில் முன்னணி நடிகர்களுடன் தோனி பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தெரிய வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து பேசிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சில விளம்பர படங்களையும் தோனி நடித்துள்ளார். நடிகை நயன்தாராவிடமும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மிக விரைவில் தோனி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

First Tamil film to be produced by Dhoni Entertainment


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->