வாயால் வாங்கி கட்டிக்கொண்ட சன் டி.வி. : திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து சூர்யா, இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளினிகள் இருவர் நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

கே.வி.ஆனந்த் இயக்கும் சூர்யா 37 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகள் இருவர் 
நடிகர் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசினர். 

அதாவது நடிகை அனுஷ்காவுக்காவது ஹீல்ஸ் போட்டுத்தான் நடிச்சாரு... அமிதாப் பச்சனுக்கு ஸ்டூல் போட்டு ஏறி நின்னு தான் அவர் பேசணும் என்று சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர்.

இத்தகைய நிகழ்வானது சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளினிகளின் செயலுக்கு திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர்கள் விஷால், கருணாகரன், இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஆகியோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்று திடீரென சன் டி.வியின் அலுவலகத்தின் முன்பாக சூர்யாவின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும், சூர்யாவை தரம்தாழ்ந்து விமர்சித்ததைக் கண்டித்து போஸ்டர்களையும், பேனர்களையும் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர் சூர்யா ரசிகர்கள்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அந்த இரு தொகுப்பாளினிகளுக்கும், அவர்களைக் கண்டிக்காத சன் டி.வி நிறுவனத்திற்கும் எதிராக தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சன் டிவி அலுவலகத்தின் முன்பு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியிருப்பதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fans are undertaken sun tv


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->