ஓடும் காரிலிருந்து கீழே தவறி விழுந்த பிரபல நடிகை : பதிவை வெளியிட்டதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


படப்பிடிப்பின்போது ஓடும் காரில் இருந்து கீழே விழுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியிருக்கிறார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா.

ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரான குவாண்டிகோ 3 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்தத் தொடருக்காக தனது நீளமான தலை முடியை கட் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார். 

மேலும் அவர் இந்த சீசனுக்கான வித்தியாசமான லுக் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், படப்பிடிப்பின் போது கார் ஒன்றில் சண்டை போடும் காட்சியில் நடித்தபோது பிரியங்கா சோப்ரா தவறி கீழே விழுவது போன்ற விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில் காரின் முனையில் நின்று கொண்டு, கார் மேல் பகுதியை பிடித்தவாறு தன்னை கீழே தள்ள முயற்சிக்கும் சக நடிகர் ருசல் டோவியை காலால் எட்டி உதைக்க முற்படுகிறார். அப்போது பேலன்ஸ் இழந்து கீழே விழுகிறார்.

இதனைப் பார்த்த நடிகர் ருசல், மிகுந்த பதட்டத்துடன் என்ன நடக்கிறது. காரை நிறுத்த வேண்டும் என்கிறார். 



 

இந்த நிலையில், ரசிகர்களை பிராங் செய்யும் விதமாக இவை அனைத்தும் பிரியங்கா, ருசல் ஆகியோரால் திட்டமிடப்பட்டு செல்பி வீடியோவாக எடுக்கப்பட்டிருப்பது அந்த வீடியோவின் இறுதியில் தெரிகிறது. 

மேலும் இவர்கள் இருவரும் இருக்கும் கார் நகராமல் அதே இடத்திலேயே இருக்க, பின்னணியில் தெரியும் காட்சிகள் நகர்வதால், பார்ப்பதற்கு ஓடும் காரிலிருந்து பிரியங்கா விழுவது போல் தத்ரூபமாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. தற்போது இந்த வீடியோ பிரியங்கா காரிலிருந்து விழுவதாக கூறப்பட்டு வைரலாக பரவி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress has released a video of a video dropping down from the running car


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->