முக்கியமான நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட பிரபல நடிகை!. - Seithipunal
Seithipunal



சூர்யா நடித்த "தானா சேர்ந்த கூட்டம் படத்தில்" கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவரப்பட்டார்.

நடிகை மீரா மிதுன் மாடலிங் மற்றும் சினிமா இரண்டிலுமே சமமான கவனம் செலுத்த விரும்புகிறார். இவர் மாடலிங்கில் இருந்தபோதே இவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் கொடுத்த நடிகர் விஷால், சினிமாவிற்கு வருமாறு முன்பே கூறியிருக்கிறார்.

              

இந்தநிலையில் மீரா மிதுன் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் நடிப்பதற்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.  ஆடிஷனில் பல ஸ்டேஜ் வரை சென்ற மீரா மிதுணுக்கு ஏதோ சில காரணங்களால் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. அந்த கேரக்டரில் தான் நடிகை திரிஷா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல கமல் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் மீரா மிதுன். அதுவும் சில காரணங்களால் கடைசி நேரத்தில் இவரை விட்டு வேறு நடிகைக்கு சென்றுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous actress missed chance to act with famous actors


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->