கர்ப்பமாக இருக்கும் நிலையில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் எமி ஜாக்சன்!! ஷாக் ஆன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal



சில தமிழ் சினிமா நடிகைகளில் பலர் ஆரம்பத்திலேயே பெரிய நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவர். அவ்வாறு வெளிநாட்டில் பிறந்த எமி ஜாக்சன் இந்திய மற்றும் தமிழ் சினிமா படங்களில் கலக்கி கொண்டு இருக்கிறார். மதராச பட்டினம் என்ற ஒரே படத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார் நடிகை எமி ஜாக்சன். இயக்குனர் AL விஜய் முதல் படமே இவருக்கு எமிக்கு பெரும் புகழை தேடித்தந்தது.

கடைசியாக இவரது நடிப்பில் ரஜினியின் 2.0 படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. மிகவும் ஹிட்டான இப்படத்தை பற்றி பேசாத நபரே இல்லை என்று கூறலாம். 

சில நாட்களுக்கு முன்பு எமி ஜாக்சன் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். இன்னும் திருமணம் செய்து கொள்ளாத எமி  தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக தகவலை இணையத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன் ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை மீண்டும் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் உங்கள் உடல் நலத்தையும், குழந்தையின் நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள் என அவரது ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

emi jackson in gym


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->