ராஜமௌலி படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை..! - Seithipunal
Seithipunal


ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த படம் ஆர்.ஆர்.ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்ட பலர் நடிதுள்ளனர். இப்படம் 2023ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பில் குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வானது. 

இதனால், ஆஸ்கர் விருது போட்டிக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு தனிப்பட்ட முயற்சியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் ராஜமௌலி. 

இதைத்தொடர்ந்து ராஜமௌலி மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தப்படம் உலகளாவிய ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்றும் ஜேம்ஸ் பாண்ட், இண்டியானா ஜோன்ஸ் போன்ற ஹாலிவுட் படங்களின் பாணியில் ஒரு இந்தியப் படமாக இருக்கும் என்றும் ராஜமௌலி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director rajamouli next movie depika padukone acting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->