காவி கவர்ச்சி.. உடையில் தீபிகா படுகோன்.. கொந்தளித்த இந்து அமைப்புகள்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம்தான் பதான். இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இதில் நடிகர் ஜான் ஆபிரகாம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஷாருக்கான் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகள் ஆன நிலையில் அதை கொண்டாடும் விதமாக படக்குழு சமீபத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டது. 

இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஹீரோயின் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் வரும் 2023 ஜனவரி 25-இல் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் பாடல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. 

தற்போது பதான் படத்தில் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், இதில், நடிகை தீபிகா படுகோன் காவிநிற உடையில் கவர்ச்சியாக இருந்ததற்கு இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. படத்தின் காட்சிகளை திருத்தவில்லை என்றால் படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Deepika padukone pathan song Make Controversy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->