அழகான பெண் குழந்தை, அமைதியான குடும்பம் என ஆளே மாறிப்போன அசின், இப்போது என்ன செய்கிறார்..? வைரலாகும் போட்டோ.. - Seithipunal
Seithipunal


அசின்,  கேரள மாநிலத்தைச் சேர்ந்த  நடிகை, மேலும் பயிற்சி பெற்ற பரதநாட்டியக் கலைஞர் ஆவார்.

2001 ஆம் ஆண்டில் வெளியான சத்யன் அந்திக்காடின் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அவரது முதல் வர்த்தகரீதியான வெற்றித் திரைப்படம் 2003 ஆம் ஆண்டில் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமான அம்மா நன்னா ஓ தமிழ் அம்மாயி ஆகும்.

அத்திரைப்படத்திற்காகச் சிறந்த தெலுங்கு நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றார். அவரது முதல் தமிழ் திரைப்படமான எம். குமரன் சன் ஆஃப் மகாலஷ்மி வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

கஜினி (2005) திரைப்படத்தில் அவரது பாராட்டத்தக்க நடிப்பிற்காக பிலிம்பேர் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.

தமிழ் கஜினி திரைப்படத்தின் இந்தி தழுவலான கஜினியின் மூலம் அசின் இந்தி திரையுலகில் கால்பதித்தார், இதன்மூலம் பிலிம்பேர் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதைப் பெற்றார். 

இதனையடுத்து தளபதி விஜய், தல அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து மேலும் பிரபலமானார்.

பின்னர் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார், கடந்த வருடம் இவருக்கு பெண் குழந்தையும் பிறந்திருந்தது.

தற்போது அவரது வாழ்க்கை கணவன், குழந்தை என வேறு ஸ்டைலில் மாறி விட்டது. தற்போது தன்னுடைய குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழந்து வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

current situation of actress acin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->