ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.!!  - Seithipunal
Seithipunal


வரும் 17வது மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தீவிர கூட்டணி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நம் தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைந்துள்ளது. எதிர்க்கட்சியாக உள்ள திமுக தலைமையிலும் 8 கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்ஆர் காங்கிரஸ், தமாகா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்து உள்ளது. இந்த கூட்டணியில்., 
அதிமுக 20 தொகுதிகளிலும்,
பாஜக 5 தொகுதிகளிலும்,
பாமக 7 தொகுதிகளிலும், 
தேமுதிக 5 தொகுதிகளிலும்,
என்ஆர் காங்கிரஸ் புதுச்சேரி மக்களவை தொகுதியிலும்,
தமாகா 1 தொகுதிகளிலும்,
புதிய தமிழகம் 1 தொகுதிகளிலும்,
புதிய நீதி கட்சி 1 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி, வேட்பாளர்கள் யார் யார் என்று இன்னும் ஒரு இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது.

அதிமுக தலைமையில் அமைந்துள்ள இந்த மெகா கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதராசு தெரிவித்து வருகிறது. நேற்று, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் திரு.என்.ஆர். தனபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து, நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தலிலும் தங்கள் கட்சியின் முழு ஆதரவை அளிப்பதாக தெரிவித்தனர்.

அதேபோல், பசும்பொன் மக்கள் கழகத்தின் நிறுவனர், தலைவர் ச.இசக்கிமுத்து அவர்கள் மற்றும் நிர்வாகிகள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து, அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அஇஅதிமுகவிற்கு தங்கள் கட்சி முழுஆதரவினை அளிக்கும் என தெரிவித்தனர்

இந்நிலையில், திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு.எம்.விஜயகணேஷ் அவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களை நேரில் சந்தித்து, அஇஅதிமுகவில் தான் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

COMEDY ACTOR JOINED AIADMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->