அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ரஜினி.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!!
CHRISTMAS CELEBRATION IN AMERICA BY RAJINIKANTH
இந்திய மற்றும் தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்., உலகளவில் தனக்கென தனி ரசிகர் படையை வைத்து கொண்டு சிறியவர் முதல் பெரியவர்கள் வரை., ரசிகர்களால் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் ரஜினிகாந்த். கடந்த 2 வருடங்களாகவே ரசிகர்களுக்காக அடுத்தடுத்த திரைப்படங்களை அதிரடியாக வழங்கி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
தற்போது ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகிய 2.0 திரைப்படமானது நவம்பர் மாதம் 29 ம் தேதியன்று உலகளவில் வெளியாகி அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும்., வசூலிலும் தனக்கென தனி கோட்டையை கட்டியது.
இந்த படத்தில் நடித்து முடித்த பின்னர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களுடன் பேட்ட திரைப்படத்தில் நடிக்க துவங்கிய ரஜினி., தற்போது பேட்ட படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெற்று பொங்கலுக்கு திரைக்கு வருவதற்கான வேலைப்பாடுகள் அனைத்தும் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்., 20 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்த இவர் தற்போது கிறிஸ்துமஸ் திருவிழா கொண்டாடி வரும் புகைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தில் குல்லா மற்றும் ஸ்வட்டர் அணிந்த நிலையில் அங்குள்ள ரசிகர்களுடன் எடுத்த புகைப்படமானது இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
CHRISTMAS CELEBRATION IN AMERICA BY RAJINIKANTH