ரஜினியின் மகள் திருமணத்திற்கு சென்ற மொத்த அதிமுகவினர்! வியந்து பார்த்த ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. கோச்சடையான், விஐபி2 போன்ற படங்களை இயக்கிய இவருக்கும், தொழிலதிபர் அஷ்வினுக்கும் கடந்த 2010ல்  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக சௌந்தர்யா கடந்தவருடம் அஷ்வினை விவாகரத்து செய்து பிரிந்தார்.

இந்நிலையில் தற்போது சௌந்தர்யா, தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். இவர்களது திருமணம் இன்று பிப்ரவரி 11-ஆம் தேதி  நடைபெற்றது.

சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் எனும் நட்சத்திர ஓட்டலில் கோலாகாலமாக நடைபெற்றது. திருமணத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பலரும் திருமண விழாவில் கலந்துகொண்டனர்.

மேலும் சினிமாத்துறையில் இருந்து நடிகர் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், வைரமுத்து, அனிருத், இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ் மற்றும் நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister and Ministers in Rajini daughtre's marriage


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->