அடடே... ஆந்திர முதல்வரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமா.? ஜெகன்மோகன் ரெட்டியாக நடிக்கும் பிரபல தமிழ் கதாநாயகன்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் மறைந்த முதல் மந்திரி ராஜசேகர ரெட்டி. இவரது வாழ்க்கை வரலாறு  யாத்ரா என்ற பெயரில்  திரைப்படமாக எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் ராஜசேகர  ரெட்டியாக மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதன் தொடர்ச்சியாக யாத்ரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என இயக்குனர் அறிவித்திருந்தார். ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல்களுக்கு ஒரு வருடங்களை இருக்கும் நிலையில் யாத்ரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தத் திரைப்படம் ராஜசேகர ரெட்டியின் மகனும் ஆந்திராவின் தற்போதைய முதல் வருமான ஜெகன்மோகன் ரெட்டியின்  வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது. ஜெகன்மோகன் ரெட்டியின் குழந்தை பருவம் முதல் அரசியல் பயணம் தொடங்கி தற்போது முதல் மந்திரியாக இருப்பது வரையான காலகட்டத்தை திரைப்படமாக எடுக்க இருக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியாக நடிப்பதற்கு நடிகர் சூர்யாவிடம் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் யாரும் தன்னை இது தொடர்பாக கேட்கவில்லை என சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது ஜெகன்மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க  நடிகர் ஜீவா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்தத் திரைப்படத்திற்கான கதை மற்றும் திரைக்கதை தயாராக உள்ள நிலையில் ஏற்பட படிப்புகள் ஆரம்பமாகும் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனைப் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

andhra cm biopic will going to film soon fame tamil actor will act as jegan mohan reddy


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->