ஆர்யா, சயீஷா திருமணவரவேற்பில் கலந்து கொண்ட விஜய்!! திரைபிரபலங்கள் ஒன்று கூடிய மேடை!!  - Seithipunal
Seithipunal


முன்னதாக நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவை திருமணம் செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. முதலில் இதை அனைவரும் வதந்தியாகவே பார்த்தனர்.

ஆனால், அதன் பின்னர் அவர்களுக்கு நிச்சயம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றநிலையில் அனைவரும் நம்பும் சூழல் ஏற்பட்டது. பின்னர் அவர்களுக்கு கடந்த 10ம் தேதி திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் ஆர்யா சயீஷா திருமண வரவேற்பு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சயீஷா திருமண நிகழ்வை போலவே சிவப்பு நிறத்தில் உடையணிந்து இருந்தார்.

அதே போல் நடிகர் ஆர்யா கோட்சூட் அணிந்து இருந்தார். நடிகர் சயீஷாவை கோலிவுட் சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குனர்.ஏ.எல். விஜய் இயக்குனர் நடிகை என்பதை மீறி இருவருக்கும் ஒரு நெருங்கிய அண்ணன், தங்கை போலவே பழகி வந்துள்ளனர்.

எனவே, அவரையே அண்ணனாக அவர் முன் நிறுத்தவும் செய்தார். நேற்று ஏ.எல். விஜய் தனது தங்கையின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தியுள்ளார். 

மேலும், பிரபல நடிகரும், ஆர்யாவின் நெருங்கிய நண்பருமான பரத் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இயக்குனரும், நடிகருமான பாக்யராஜின் மகன் சந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தியுடன் கலந்து கொண்டார். மேலும், பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ஆர்யா, சயீஷா வரவேற்பு நிகழ்வை கொண்டாடினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AL.Vijay in arya sayeesh marrige reception


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->