அஜித்தின் அடுத்த படத்தில் களமிறங்கும் பாலிவுட் முன்னணி நடிகை! - Seithipunal
Seithipunal


நடிகர் அஜித்குமார், சிறுத்தை சிவா கூட்டணியில் வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் கூட்டணியில் இணைந்திருக்கும் படம் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தில் நடிகர் அஜித்க்கு ஜோடியாக  பில்லா, ஏகன், ஆரம்பம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா நான்காவது முறையாக இணைந்திருக்கிறார். மேலும் காமெடி நடிகர்களான யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். படத்தின் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் என் இரண்டுமே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அஜித் தனது ‘விஸ்வாசம்’ படத்தை முடித்த பிறகு, அவரின் அடுத்த படத்தை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய இயக்குநர் வினோத், இயக்குவார் எனவும், படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாகவும் என அதிகார பூர்வமாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த படம் பாலிவுட்டில் வெளியான 'பிங்க்' என்ற படத்தின் ரீமேக் எனவும், 'ஸ்ரீதேவி'யின் கணவர் போனி கபூர் தயாரிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த படத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நாயகியான வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith's next film is Bollywood's leading actress!


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->