இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக  அஜித்துக்கு எல்.இ.டி” கட் அவுட்!! களைகட்டியது விஸ்வாசம் திருவிழா!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் சிவா, அஜீத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் விஸ்வாசம். இத்திரைப்படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அஜித்துடன் 4 ஆவது முறையாக நாயன்தாரா இணைந்து நடித்துள்ளார். 

உலகம் முழுவதும் படம் நாளை திரையிடப்பட இருக்கிறது.  டிக்கட் புக்கிங் ஓபன் செய்த சில மணி நேரங்களில் புக்கிங் முடிந்தது. படம் நாளை வெளியாக இருப்பதால், ரசிகர்கள்  போஸ்டர் ஒட்டுவது, கட்அவுட் வைப்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வரும் படி செட் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதுபோன்று, எல்.இ.டியில் டிஜிட்டல் கட் அவுட் வைப்பது சினிமா வரலாற்றில் இதுவே முதன்முறை ஆகும். 



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ajith Viswasam Celebration Fans


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->