இது மட்டும் நடந்துவிட்டால் போதும்., அதற்கு பின்னர் டும்..டும் தான்.!! திரிஷா ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. தமிழில் நடிக்க துவங்கிய இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தனது நடிப்பு திறமையால் தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு., ஹிந்தி., கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்த 96 திரைப்படமானது காதலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில்., திரையுலகில் இருக்கும் நயன்தாரா., அனுஷ்கா மற்றும் திரிஷாவை பற்றிய காதல் கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில்., நடிகை நயன்தாரா விக்னேஷ்சிவனை காதலித்து வருகிறார். 

நடிகை அனுஷ்கா பாகுபலி புகழ் நடிகரான பிரபாஸை காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில்., கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக நடிகை திரிஷாவுக்கும் நடிகர் ராணாவிற்கும் இடையே காதல் உள்ளதாக தகவல் வெளியானது. 

இதற்கு அடுத்தபடியாக நடிகை திரிஷாவுக்கும் தயாரிப்பாளருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில்., சில தவிர்க்க முடியாத காரணத்தால் திருமணம் தடைபட்டது. இந்த சூழ்நிலையில்., இது குறித்து இவரிடம் கேட்டதற்கு இப்போதைக்கு எந்த விதமான காதல் பயமும் படவில்லை., எனக்கான நபரை சந்தித்த பின்னர் திருமணம் செய்வேன் என்று தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress trisha speech about marriage life


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->