எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக கைகோர்க்கும் நடிகை சாயிஷா.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வனமகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாயிஷா.இவர்   கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.மேலும் கடைக்குட்டி சிங்கம் வெளிவந்து பெரும் பாராட்டை பெற்றது.    

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நடிப்பில் உருவாக இருக்கும் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ என்ற படத்தில் நடிகை சாயிஷா நடிக்க இருக்கிறார்.

தொடர்புடைய படம்

அதாவது எம்.ஜி.ஆர். மஞ்சுளா, லதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ . இந்தப் படத்தை எம்.ஜி.ஆர். இயக்கியிருந்தார். இந்தப் படத்தை அடுத்து அதேபோல் அதன்தொடர்ச்சியாக உருவாக்க திட்டமிட்டிருந்த படம் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’. ஆனால் எம்ஜிஆர் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் இந்த படத்தை எடுக்க முடியவில்லை 

இந்நிலையில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான நகைச்சுவை நடிகரும், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனருமான ஐசரிவேலனின் மகன் ஐசரிகணேஷ் ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ படத்தை தயாரித்து வருகிறார். 

kilakku africavil raju க்கான பட முடிவு

இந்த படம் முழுக்க முழுக்க அனிமேஷனில்  தயாராகி வருகிறது. இந்நிலையில்,  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக இந்த படத்தில் ஜெயலலிதா மீண்டும் நடிக்கிறார். 

மேலும்  எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இரண்டாவது ஹீரோயினாக சாயிஷா நடிக்கிறார். அதற்கு அவரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டு அவரது உருவத்தை கிராபிக்ஸ் செய்து படத்தில் நடிக்கவைத்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Saiisha to pair with MGR


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->