இன்கேம் இன்கேம் ராஷ்மிகா தமிழில் அறிமுகம்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


கதாநாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான தேவ் திரைப்படம்., திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில்., மாநகரம் திரைப்படத்தின் இயக்குனரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்து கொண்டு இருக்கிறார். 

இந்த படத்தின் நிறைவுக்கு அடுத்தபடியாக ரெமோ படத்தின் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. 

இந்த படத்திற்கான நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில்., இந்த படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. 

தெலுங்கு திரையுலகில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தில் வரும் இன்கிம் இன்கிம் இன்கிம் கவாலே என்ற பாடலின் மூலமாக தமிழ் இளைஞர்களை கவர்ந்திழுத்த இவர்., தற்போது நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்., இதற்கு முன்னதாக நடிகர் விஜயுடன் நடிக்கவிருப்பதாக வதந்திகள் கிளம்பிய நிலையில்., இந்த தகவல் விரைவில் உறுதிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress Rashmika Mandanna entry Tamil industry act on with karthick


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->