பிரபல நடிகருடன் இணையும் அதிதி சங்கர்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் ’விருமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். தனது முதல் படத்திலேயே தனது துள்ளலான நடிப்பாலும், நடனத்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த இவர் நடிப்பு, நடனம் மட்டுமல்லாது பாடகியாகவும் தம்ப்ஸ் அப் வாங்கியுள்ளார்.

இதையடுத்து, சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடித்திருந்த அதிதி, தற்போது, விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அதர்வா தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் நடிகை அதிதி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, ‘கங்குவா’ படத்திற்கு அடுத்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டது. 

இந்த படத்தில், தான் நடிகை அதிதி சூர்யாவுக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் துல்கர் சல்மான், விஜய் வர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘கங்குவா’, ‘வாடிவாசல்’ படத்திற்கு அடுத்து சுதா கொங்கரா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress aditi sankar jouned work with actor surya


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->