காசுக்காக தான் கடைசியில் திருமணம் செய்கிறாரா விஷால்.! நடிகை அனிஷா வெளியிட்ட பரபரப்பு பின்னூட்டம்.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சங்க கட்டிடத்தை கட்டிய பின் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷர் கூறியிருந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா என்பவரை  விஷால் திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும், அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிரடியை பேட்டியளித்த நடிகர் விஷால், ''அனிஷாவை திருமணம் செய்து கொள்ள இருப்பது உண்மைதான்.  நிச்சயதார்த்தம் எதுவும் இன்னும் நடக்கவில்லை. . மேலும் நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தில்தான் எங்களது திருமணம் நடைபெறும்'' என விஷால் அறிவித்தார்.

இதற்கிடையே, இதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். மேலும், தனது சமூக வலைதளத்தில் அனிஷாவுடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.


 

இதைபோல், விஷாலை திருமணம் செய்துகொள்ளும் நடிகை அனிஷா பொங்கல் தினத்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விஷாலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதை தெரிவித்திருந்தார்.


 
இதற்கிடையே, நடிகர் விஷால் காசுக்காகத்தான் அனிஷாவை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று ஒருவர் பின்னூட்டம் (கமாண்ட்) இட, இதனை பார்த்த நடிகை அனிஷா, காசுக்காக விஷால் தன்னை திருமணம் செய்துகொள்ளவில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vishal marriage for money


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->