விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கிதுரை பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி உள்ளார். பேராண்மை, புறம்போக்கு படங்களை இயக்கிய, இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். நடிகைகள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சர்வதேச அளவிலான ஒரு பிரச்சனையை பற்றி அலசுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மூணாறு, கொடைக்கானல், ஊட்டி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மேலும் இந்த படத்திற்காக 150 வருடம் பழமைவாய்ந்த பிரம்மாண்டமான சர்ச் செட் ஒன்று உருவாக்க உள்ளனர்.

நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இந்த படத்திற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் அதிக பட்ஜெட்டில் இந்த படம் உருவாகுவதாக கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor vijay sethupathi new movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->