என்னை அடிமை படுத்திவிட்டனர்.! தாய் மதத்திற்கு திரும்பிய தாடி பாலாஜி.!! - Seithipunal
Seithipunal


மதமாற்றம் செய்ய வற்புறுத்துவதற்கும், தானே ஒருவர் இருக்கும் மதத்தில் இருந்து மற்றொரு மதத்திற்கு மாறுவதற்கும் வேறுபாடு உள்ளது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக இந்து அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு கருத்தை திணிப்பதையே சகித்து கொள்ள முடியாத போது. நீ என்னுடைய மதத்திற்கு மாறு என்று கூறுவது கண்டிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரமாகும். அதே சமயத்தில் ஒருவர் தன் தாய் மதத்தில் இருந்து, தானே சிந்தித்து மற்றொரு மததிற்கு மாறுவதை நிறுத்த யாருக்கும் உரிமை இல்லை.

சாதியை உயர்த்தி நடக்கும் பிரச்சாரத்திற்கும், மதத்தை நிறுத்தி பிரச்சாரம் செய்வதற்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இல்லை. அவரவர் தான் சார்ந்த சாதி, மதத்தை போற்றி தான் வருகின்றனர். ஒருவரின் கருத்தை வரவேற்கவும், மறுக்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு. அதுவே ஆரோக்கியமான ஜனநாயக நாடு ஆகும். எந்த மதத்தில் இருந்தாலும், எந்த சாதியில் இருந்தாலும், இந்தியாவில் பிறந்த அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி திடீரென இந்து மதத்தில் இருந்து வேறொரு மதத்திற்கு மாறியதாக செய்திகள் வெளியாகின. தற்போது மீண்டும் அவரின் தாய் மதத்திற்கு திரும்பியுள்ளார்.  

இது குறித்து தாடி பாலாஜி தெரிவிக்கையில், ''நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து, ஒரு அடிமை போல், நான் இருக்கும் நிலை உருவானது. இதன் காரணமாக நான் என் தாய் மதத்திற்கு திரும்பிவிட்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor thadi balaji return to Hindu religion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->