இயக்குனர் லோகேஷ் கனகராஜியுடன் இணையும் பிரபல நடிகர்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜியுடன் இணையும் பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். முதல்முறையாக இவரும் நடிகர் சூர்யாவும் ‘இரும்புக்கை மாயாவி’ என்ற திரைப்படத்தில் இணைவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படம் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது.

அதன் பின்னர் லோகேஷ் கமலை வைத்து இயக்கிய "விக்ரம்" திரைப்படத்தில் ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை சூர்யாவிற்கு கொடுத்து மிரள வைத்தார். இரத்தமும் சதையுமாக அதிரடி வில்லனாக வந்த சூர்யாவின் அந்த தோற்றம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தனியார் விருது விழாவில் பேசிய சூர்யா, “வந்தால் நிச்சயம் ரோலக்ஸ் திரைப்படம் செய்யலாம்” என்று கிரீன் சிக்னல் கொடுத்தார்.  இதைத்தொடர்ந்து மற்றொரு விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனராஜூ நிச்சயம் நானும் சூர்யாவும் இணைவோம். அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு 150 நாட்கள் நடக்கும் என்று தெரிவித்தார்.

இதனால் பெரும் பரபரப்பில் இருந்த ரசிகர்களை சமீபத்தில் சூர்யா சந்தித்தார். அப்போது இந்தக்கூட்டணி குறித்து அவர் பேசுகையில், “லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து ஒரு தனிக்கதையை ரெடி செய்து என்னிடம் சொன்னார். 

எனக்கு அந்தக்கதை மிகவும் பிடித்திருந்தது. அது விரைவில் நடக்கும். அந்தத்திரைப்படம் முடிந்த உடன் லோகேஷ் கனகராஜின் "இரும்புக்கை மாயாவி" திரைப்படம் தொடர்பான பணிகள் தொடங்கும்.

இதையடுத்து, விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் முடித்த உடன் வாடிவாசல் திரைப்படம் தொடர்பான பணிகள் தொடங்கும்” என்று பேசினார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya joined director lokesh kanakaraj movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->