ஹார்ட்டின் எமோஜியோடு மனைவிக்கு நன்றி - வைரலாகும் நடிகர் சூர்யாவின் போஸ்ட்.! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடிப்பில் ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஒரு வரலாற்றுக் கதையாக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இருந்து தீபாவளி வாழ்த்து சொல்லும் விதமாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. 

இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வழக்கம் போல் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். 

அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘வாழ்க்கையை எப்படி கொண்டாட்டமாக வாழ வேண்டும் என்று எங்களுக்குக் காட்டியதற்காக நன்றி பொண்டாட்டி’ என்று ஹார்ட்டின் எமோஜியோடு தெரிவித்துள்ளார். இதை பார்க்கும் ரசிகர்கள் இந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இதற்கு முன்னதாக தாய்லாந்தில் நடைபெற்ற கங்குவா படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. தீபாவளி தினமான நேற்றும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. 

மும்பையில் படித்து வரக்கூடிய சூர்யாவின் மகன், மகள் மற்றும் ஜோதிகாவும் தீபாவளிக்காக சென்னை வர சிவகுமார் குடும்பம் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya deepawali wishes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->