இரண்டாவது முறையாக அண்ணன் தயாரிப்பில் நடிக்கிறார் கார்த்திக்.! - Seithipunal
Seithipunal


இரண்டாவது முறையாக அண்ணன் தயாரிப்பில் நடிக்கிறார் கார்த்திக்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’பொன்னியின் செல்வன்’ இந்தப் படம் மாபெரும் வெற்றியைக் கண்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி ‘ஜப்பான்’ படத்தில் நடித்துள்ளார். 

இந்தப் படம் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகை அனு இமானுவேல் நடிப்பில் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 

இந்த நிலையில், நடிகர் கார்த்திக் சூர்யா தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ‘96’ பட இயக்குநர் பிரேம்குமார் இயக்குக்கிறார். இந்தப் படத்தில் அரவிந்த்சுவாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

மேலும், இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க உள்ளார். இதற்கிடையே இந்தப் படத்திற்கு தான் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் தயாரிப்புத் தரப்பு இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் வெளியிடும் என்றும் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னதாக கடந்த 2018ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிபில் ‘கடைக்குட்டி சிங்கம்’ வெளியானது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor karthik act in surya production


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->