தல அஜித்தின் வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


ஆளில்லா விமான வடிவமைப்பு போட்டியில் தக்‌ஷா அணி இரண்டாவது இடத்தைபிடித்ததை தொடர்ந்து , அந்த அணியின் வெற்றித் சான்றிதழுடன் அஜித் காட்சியளிக்கும் போட்டோ வெளியாகி வைரலாகியுள்ளது.


ட்ரோன் என்னும் ஆளில்லாத விமானங்களை இயக்கும் சர்வதேச போட்டி, ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது. இதன் இறுதி சுற்றில் 8 அணிகள் பங்கேற்றன. இதில் நடிகர் அஜித் ஆலோசகராக இருக்கும் சென்னை எம்ஐடியின் தக்‌ஷா அணி இரண்டாவது இடத்தை  பிடித்து பரிசு பெற்றது. இதையடுத்து நடிகர் அஜித் மற்றும் அந்த குழுவிற்கு, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, பாராட்டுகளை தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடந்த UAVMedicalExpress2018போட்டியில் இறுதிச் சுற்றில் 8 அணிகள் கலந்து கொண்டன. இதில் அஜித்தின் தக்‌ஷா அணி 2-வது இடம் பிடித்துள்ளது. 

English Summary

actor ajith vairal photoSeithipunal