பிரபல நடிகை உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.! சிகிச்சைக்கு திரையுலகிடம் பணஉதவி கேட்கும் பரிதாப நிலை.!! கவலையில் ஆழ்ந்த ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகம் மற்றும் கன்னட திரையுலகில் நடித்துவந்தவர் நடிகை விஜயலட்சுமி. இவர் தமிழ் திரையுலகில் நடிகர் விஜய்யின் பிரண்ஸ் படத்தில்., நடிகர் விஜய்க்கு தங்கை கதாபாத்திரத்திலும்., நடிகர் சூர்யாவிற்கு கதாநாயகியாகவும் நடித்திருந்தார். மேலும்., ஆர்யாவின் பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தில்., ஆர்யாவின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வராமல் இருந்த காரணத்தால்., திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்து வந்த நிலையில்., பட வாய்ப்புகள் குறைந்து கிடைக்கும் திரைப்படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில்., அவர் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்று வந்தார். மேலும்., அவருக்கு உயர் இரத்த அழுத்த நோய்யானது இருந்து வந்தது. 

இந்நிலையில்., தீவிரமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து., சென்னையில் உள்ள மல்லையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் குறித்து விஜயலட்சுமி சகோதரி தெரிவித்தாவது., 

விஜயலட்சுமி நேற்று வீட்டில் இருந்த சமயத்தில் திடீரென இரத்த அழுத்தமானது அதிகானது. இதனால் நிலைகுலைந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்து., உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதித்தோம். 

ஏற்கனவே எங்களது தாயார் உடல் நலக்குறைவால் அவதியடைந்த போது., பணம் அனைத்தையும் அவரின் சிகிச்சைக்காக்க செலவு செய்துவிட்டோம். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால்., மிகுந்த பொருளாதார சிக்கலில் இருந்து வருகிறோம். விஜயலட்சுமிக்கு உதவி செய்ய திரைத்துறையினர் முன் வந்து உதவி செய்ய வேண்டும் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a famous actress vijayalatsumi admit hospital due to high pressure


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->