விஸ்வாசம் படத்தின் அடிச்சிதூக்கு பாடல் சாதனை!! - Seithipunal
Seithipunal


விஸ்வாசம் படத்தில் இருந்து அடிச்சிதூக்கு என்ற பாடல் வெளியாகி பல சாதனைகளை தொடர்ந்து படைத்தது வருகிறது. இந்த பாடலை இதுவரை எத்தனை பேர் பார்த்து உள்ளார்கள் என்ற செய்தியை தற்போது வெளியிட்டுள்ளது. 
 
தல அஜித், சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து "விஸ்வாசம் " படத்தில் நடித்துள்ளார். அஜித்துடன் பில்லா, ஏகன், ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் "விஸ்வாசம் " படத்தில் கைகோர்த்துள்ளார். 

இந்த படத்தில், விவேக், தம்பிராமையா, விவேக், யோகி பாபு , ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக்  ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இமான் இசையமைக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. விவேகம் படத்தை தொடர்ந்து, ரூபன் இப்படத்தையும் எடிட்டிங் செய்துள்ளார். படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ளது.  

இதையடுத்து, படத்தின் முதல் பார்வை, இரண்டாம் பார்வை, மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் படத்தின் அடிச்சி தூக்கு என்ற பாடலும் கடந்த 10 ஆம் தேதி இரவு 7 மணிக்கு வெளியாகியது.  

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் அடிச்சி தூக்கு பாடல் யூடியூப் -ல் வெளியான சில நேரத்தில் இதுவரை பல சாதனைகளை தொடர்ந்து படைத்தது வருகிறது. பாடல் வெளியான 8 நிமிடத்தில் 1 லட்சம் பேர் விருப்பம் தெரிவித்தனர்.

பாடல் சரியாக நேற்று இரவு 7 மணிக்கு பாடல் வெளியிடப்பட்டது.  24 மணி நேரத்தில் 5.2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

மிக குறைந்த நேரத்தில் அதிகப்படியான விருப்பங்கள் மற்றும் பார்வையாளர்களை கொண்டது இந்த பாடல் என்ற சாதனையை விஸ்வாசம் படம் பிடித்தது.  



 

இந்த படத்தின் பாடல் தற்போது,7M பார்வையாளர்களை தாண்டியது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 Million + Views Viswasam #AdchiThooku #ViswasamFirstSingle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->