2.0 படத்தின் பாடல் காட்சிகள் வெளியீடு.!! - Seithipunal
Seithipunal


 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான திரைப்படம் "2.0". இந்த திரைப்படமானது கடந்த நவம்பர் மாதம் 29 ம் தேதியன்று உலகளவில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படத்தில் நடிகர் அக்சய்குமார்., நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த படம் முழுவதும் 3 டி தொழில்நுட்பத்துடன் பல கலைஞர்கள் பணியாற்றி எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையமைத்திருந்தார். மேலும் இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ட்டின் தயாரித்து வழங்கியது. உலகம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் வசூல் சாதனை புரிந்தது. 

தற்போது இந்த திரைப்படத்தில் இருக்கும் "புள்ளினங்காள்" பாடல் வீடியோ காட்சிகள் இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் வெளியிடப்போவதாக படக்குழு தெரிவித்த நிலையில்., தற்போது பாடல் காட்சிகள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2.0 MOVIE PULLNGANGAL SONG


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->