முருங்கை மரத்தின் வேதாளத்தை போல (20/01/19) மீண்டும் உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை.!!  - Seithipunal
Seithipunal


கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.26 ஆயிரத்தை விட அதிகமாக அவ்வப்போது விலையேற்றத்தை கண்டு வருகிறது. அதன்படி., (19/01/19) நேற்று விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கத்தின் விலையானது 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3,258 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.25,064 விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில்., இன்று (20/01/19) 24 கேரட் அளவுள்ள 1 கிராம் தங்கத்தின் விலையானது ரூ.3,260 ஆகவும்., 8 கிராமிற்கு ரூ.26,080 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,111 ஆகவும்., ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.24,888 ஆகவும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.  அந்த வகையில் இன்றைய (20/01/19) 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3,113 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராமின் விலையானது ரூ.24,904 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரையில் (19/01/19) நேற்றைய விலையில் இருந்து எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இன்றும் (20/01/19) 1 கிராமுக்கு 41.50 ஆகவும்., 10 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.415 ஆகவும்., 100 கிராம் வெள்ளியின் விலையானது ரூ.4150 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாகவே குறைவாக இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது திடீரென மீண்டும் உயர தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today 20.01.19 gold and silver price in Chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->