பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியுமா? முடியாத? இந்தியாவை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்தை அறிவித்த லாரி உரிமையாளர் சங்கம்! - Seithipunal
Seithipunal


டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 20-ஆம் தேதி லாரிகள் ஓடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார். 

கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. அப்போது, வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள அகில இந்திய லாரிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் கோவை லாரி உரிமையாளர்கள் திரளாக பங்கேற்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாவட்டத்தை பொருத்தவரை 75 ஆயிரம் லாரிகள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் என அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 20-ஆம் தேதி காலை 6 மணி முதல் 4 லட்சத்துக்கு மேற்பட்ட லாரிகள் ஒடாது என்று அறிவித்துள்ளார். விரைவில் டேங்கர் லாரி, கண்டெய்னர் லாரி, மினி ஆட்டோ உரிமையாளர்களும் தங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்றும், வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு 300 முதல் 400 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்களுக்கு ஆதரவாக 20-ஆம் தேதி ஒரு நாள் மட்டும் பொதுமக்கள் வாகனங்களை இயக்காமல் ஆதரவு தர வேண்டும் என்று குமாரசாமி கேட்டுக்கொண்டார். டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

டீசல் விலை ஏற்றம், மூன்றாம் நபர் காப்பீடு உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது என்பது தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the price of petrol and diesel be reduced in larry owner struggle


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->