வருமானவரித்துறை கிடுக்கிப்படி இறுகும்: தமிழகத்தில் புதிதாக 10 லட்சம் பேரை வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் கொண்டுவர இலக்கு - Seithipunal
Seithipunal


நடப்பு நிதியாண்டில் தமிழகத்தில் புதிதாக 10.40 லட்சம் பேரை வருமானவரி செலுத்தும் வரம்புக்குள் கொண்டுவரவும், நாடுமுழுவதும் 1.3 கோடி பேரை கொண்டுவரவும் வருமானவரித்துறைக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

வரிவருவாயை அதிகப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. நாட்டில் கடந்த 2016-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்துக்கு பின் வரிஏய்ப்பை கண்டறிவதில் வருமானவரித்துறை தீவிரம் காட்டி வருகிறது. வரிவருவாயை அதிகப்படுத்த வேண்டும் என்று வருமானவரித்துறைக்கு மத்திய அரசு உத்தரிவிட்டுள்ளது.

இதன்படி மண்டலம் வாரியாமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வருமானவரி செலுத்துவோர் பட்டியலி்ல பலர் சேர்க்கப்பட்டுள்ளனர். நடப்பு நிதியாண்டில் நாடுமுழுவதும் புதிதாக 1.3 கோடிபேரை வருமானவரி செலுத்தும் வரம்பில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக உத்தரப்பிரேதச்தில் 13.3 லட்சம் பேரையும், வடமேற்கு மண்டலத்தி்ல் 11.5 லட்சம் பேரையும், புனேயில் 11.3 லட்சம் பேரையும் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தமிழகம், தெலங்கனா மாநிலங்களில் தலா 10.40 லட்சம் பேர் வருமானவரி செலுத்தும் வரம்பில் கொண்டுவரப்பட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new income tax assesse cdtb


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->