மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனரகதிடம் 28 ஆயிரம் கோடிக்கு அடிபோட்ட மத்திய நிதி அமைச்சகம்.!! ஒப்புதல்.!! - Seithipunal
Seithipunal


ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி தொகையில் இருந்து 27,380 கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு நிதி ஆண்டும், ரிசர்வ் வங்கி தனது உபரி வருமானத்தில் அவசர கால நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை பராமரித்து வருகின்றது. இந்த உபரி தொகையிலிருந்து 27 ஆயிரத்து 380 கோடி ரூபாயை மத்திய அரசுக்குக் கொடுக்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிசர்வ் வங்கி ஒரு நிதி ஆண்டின் முடிந்த முடிவில் கிடைக்கும் உபரி வருமானத்தில், ஒவ்வொரு நிதி ஆண்டும், தனது உபரி வருமானத்தில் அவசர கால நிதியாக ஒரு குறிப்பிட்ட தொகையை பராமரித்து வருகின்றது

கடந்த 2016-17-ம் நிதி ஆண்டில் 13,190 கோடி ரூபாயும், அதேபோல், 2017-18 நிதி ஆண்டில் 14,190 கோடி ரூபாயும் சேமிப்பாக வைத்துள்ளது. இந்த இரண்டும் சேர்த்து மொத்தமாக ரிசர்வ் வங்கியிடம் உள்ள 27,380 கோடி ரூபாய் உபரி நிதியை, மத்திய அரசுக்கு வழங்குமாறு மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கடந்த ஆண்டில் முடிவடைந்த இரண்டாம் அரை நிதியாண்டு நிலவரப்படி ரிசர்வ் வங்கி தன்னிடம் உள்ள உபரி வருமானம் 28 ஆயிரம் கோடி ரூபாயை இடைக்கால உபரி தொகையான மத்திய அரசிடம் அளிக்க மத்திய ரிசர்வ் வங்கி இயக்குனரகம் இன்று தீர்மானித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RBI AGREE TO FUND


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->