ஒரே நாளில் 10 ரூபாய் உயரப்போகும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.! வெளியான திடுக்கிடும் தகவல்.!! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்.!!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுகிறது. அதில் மூன்று கட்ட தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. மற்ற மாநிலங்களில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியவை, கச்சா எண்ணெயின் விலை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. 

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் துணிச்சலாக பேசும் பிரதமர் நரேந்திர மோடி மௌனமாக இருப்பது ஏன்? மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்குவதற்காக, ஓட்டு எண்ணிக்கை நாளான மே 23-ஆம் தேதிவரை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு மோடி உத்தரவிட்டுள்ளார் 

மேலும், மே 23-ம் தேதி மாலையிலிருந்து ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.5 முதல் 10 ரூபாய் வரை விலை உயர்த்த ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

randeep surjewala says about petrol price


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->