பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஏழாவது  நாளாக உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை  32 காசுகள் உயர்ந்து ரூ.79.79 ஆகவும். டீசல் விலை ரூ.71. ஆகவும் உள்ளன. இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தளுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்பின் மே 13-ஆம் தேதி முதல் தொடர்ந்து எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த எட்டு  நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை,  , டீசல் விலை இரண்டு  ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரிபொருட்களின் விலைகளை தினமும் மாற்றும் முறை அறிமுகம் செய்யப்பட்டது முதல் இன்று வரையிலான 8 நாட்களில் மட்டும் எரிபொருட்களின் விலைகள் இந்த அளவுக்கு உயர்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். 

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 19 நாட்களாக நடைமுறைப்படுத்தப்படாத விலை உயர்வை ஈடு கட்டும் வகையில் ஒரே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அனால் இதற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழும் என்ற அச்சத்தில் அந்த முடிவை கைவிட்ட எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலைகளை அளவுக்கு அதிகமாக உயர்த்தி வருகின்றன. 

உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல், டீசல் விலைகளை தினமும் 10 பைசா முதல் 20 பைசா என்ற அளவில் உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இப்போது கடந்த  19 நாட்களில் செய்யப்படாத விலை உயர்வை ஈடு கட்டுவதற்காக தினசரி விலை உயர்வை இருமடங்காக உயர்த்தயுள்ளன. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுகள் உற்பத்தியை குறைத்து விட்டன. வெனிசுலாவில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. இத்தகைய காரணங்களால் கடந்த வாரம் பெட்ரோலியம் விலை பேரலுக்கு 80 டாலர் உயர்ந்து விட்டது என்றும் கூறினார்

பெட்ரோல் மற்றும் டீசல் மீது மாநிலங்களில் வாட் அல்லது மற்ற வரிகளும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. இதனால்தான் பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை நீக்கி விட்டு ஜி.எஸ்.டி.யினை கொண்டு வர வேண்டும் எனவும் , தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol diesel will be reduced


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->