இதற்கு மேல் பொறுத்திருக்க முடியாது..! அமெரிக்காவை பழிவாங்கிய இந்தியா..!! அடுத்து என்ன நடக்கும்..?!! - Seithipunal
Seithipunal


கடந்த ஒரு வருடமாகவே அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்துவருகிறது. இரு நாடுகளும் போட்டி போட்டு கொண்டு தங்களது நாடுகளில் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அதிகரித்து கொண்டு வருகின்றன.

அமெரிக்க நாட்டின் குடியரசு தலைவர் டிரம்ப், மெக்சிகோ, கனடா நாடுகளை தவிர்த்து, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரி விதிப்பு சதவிகிதத்தை உச்சகட்டமாக உயர்த்தி உள்ளது. இதே போல் சீனாவும் தங்களது நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிவிகிதத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. சமீபத்தில் கூட அமெரிக்க அரசாங்கம், தங்களது நாட்டில் இறக்குமதி செய்யும் உருக்கு மற்றும் அலுமினிய பொருட்கள் மீதான வரியை இந்தியா மதிப்பில் சுமார் ரூ.1,600 கோடி {241 மில்லியன் டாலர்கள்} திடீரென உயர்தியுயுள்ளது. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த இந்தியா அரசாங்கம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, ''அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்து. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்துள்ளது. 

மேலும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, ஆப்பிள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 20 வகையான பொருட்களுக்கு 10 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க கடந்த மாதமே மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian govt new tax in USA protect


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->