சீனாவுக்கு அடுத்த ஆப்பு... அர்ஜென்டினாவுடன் கைகோர்த்த இந்தியா.!! - Seithipunal
Seithipunal


லித்தியம் அயன் பேட்டரிகள் மின்சார வாகனங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப்களில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக இந்தியா கடந்த 2020-2021 காலகட்டத்தில் சுமார் ரூ.6,000 கோடிக்கு லித்தியம் இறக்குமதி செய்துள்ளது. அவற்றில் சீனாவில் இருந்து மட்டும் ரூ.3,500 கோடிக்கு இறக்குமதி செய்துள்ளது.

லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் அமெரிக்கா தலைமையில் தாது பாதுகாப்பு கூட்டு அமைப்பு கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, பின்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், கொரியா, ஸ்வீடன் மற்றும் ஐரோப்பிய யூனியன்  உறுப்பு நாடுகளாக உள்ளன.

அதன் அடிப்படையில் இந்தியாவின் கானிஜ் பிதேஷ் இந்தியா நிறுவனம்  மற்றும் கேம்யென் என்ற நிறுவனம் கூட்டாக இணைந்து அர்ஜென்டினாவின் கேட்டமர்கா மாகாணத்தில் 15,703 ஹெக்டேரில் 5 லித்தியம் சுரங்கத்தில் ஆய்வு மற்றும் லித்தியம் எடுக்க ரூ.200 கோடி மதிப்பில் ஒப்பந்ததம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் மூலம் லித்தியம் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்பத்தை பெற உதவும். லித்தியம் விநியோகத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு உதவும் என நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India dealing with Argentina lithium mines


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->