இல்லத்தரசிகளுக்கு இன்பமான செய்தி! அதிரடியாக விலை குறைந்தது! - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் தொடங்கிய காரணத்தாலும் திருமண  தேதிகள் தற்போது இல்லாத காரணத்தாலும் தங்கம் விலை குறைந்துள்ளது. தற்போதைய  சர்வதேச பொருளாதார நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. கிராமுக்கு 33 ரூபாய் சென்னையில் இன்று தங்கம் விலை குறைந்து ஒரு கிராம் 2,844 ரூபாயாக உள்ளது. 

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதால்  அமெரிக்க டாலர் மதிப்பு சரிவடைந்து வருகிறது. அதன் காரணமாக  தங்கம் விலையும் குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதும் இந்தியாவில் விலை குறைந்துள்ளது.  இதுமட்டுமின்றி தமிழகத்தில் ஆடி மாதம் தொடங்கியுள்ளதாலும், இந்த மாதத்தில் திருமணங்கள் குறைந்துள்ளதாலும், இந்தியாவில் தங்கத்தின் விலை மேலும் குறையும் எனவும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

கடந்த சில நாட்களாக இறங்கு முகத்தில் இருந்த தங்கத்தின் விலை இன்று கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக குறைந்துள்ளது. . டெல்லியில் 8 கிராம் சுத்த தங்கம் 24,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சுத்த தங்கத்தின் விலை சவரன், 23,896 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,987 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம், சவரன் 22,752 ரூபாயாகவும், ஒரு கிராம் 2,844 ரூபாயாகவும் விற்பனையாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gold rate down in chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->