அதிகாலையிலேயே அதிர்ச்சி - வணிக சிலிண்டரின் விலை அதிரடி உயர்வு.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன் படி, ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த மாதம் 1,898 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 101 ரூபாய் உயர்ந்து 1,999 ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. வணிக சிலிண்டரின் இந்த விலை மாற்றம் தள்ளுவண்டி கடை முதல் பெரிய ஹோட்டல் நடத்துவோருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

ஆனால், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லாமல், ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், இல்லத்தரசிகள் கொஞ்சம் மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial use cylinder price increase


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->