வருடத்தின் முதல் நாளே மகிழ்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை.! - Seithipunal
Seithipunal


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அதன் படி, வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ஒவ்வொரு மாதம் முதல் தேதி அன்று மாற்றி அமைக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த மாதத்திற்கான சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் 1929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

ஆனால், இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை 
4.50 ரூபாய் குறைக்கப்பட்டு 1,924.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வருடத்தின் முதல் தேதியில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

commercial gas price decrease


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->