ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அடித்தது லாட்டரி : இடைத்தேர்தல் எப்போது என அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதனால், கடந்த 10 மாதங்களாக அந்த தொகுதி காலியாகவே இருந்து வருகிறது. இந்தியாவில் இவ்வளவு காலம் காலியாக ஒரு தொகுதி இருப்பது ஆர்.கே.நகர் மட்டுமே. இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை அதிகாரி ஏ.கே.ஜோதி இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று கூறினார். மேலும், அதற்கான கால இடைவெளிகள் இருப்பதாகவும், இடைத்தேர்தலை நடத்த எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். ஏற்கனவே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, பணப்பட்டுவாடா அறாக ஓடியது குறிப்படித்தக்கது.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

ஆர்.கே.நகர் உட்பட காலியான 19 தொகுதிகள்..!! : தமிழகத்திற்கு வரப்போகிறது இடைத்தேர்தல்..!?

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் கமல் போட்டி..? அடுத்ததாக எந்த கட்டத்தை நோக்கி நகரும்..?

Advertisement


Get Newsletter

Seithipunal