நள்ளிரவில் தனது மனைவியுடன் சென்ற போலீஸ் எஸ்.பி க்கு நேர்ந்த கதி.!! எஸ்.பி.க்கே இந்த நிலைமையா? சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!! - Seithipunal
Seithipunal

நேற்று இரவு, போலீஸ் எஸ்.பி ஒருவர் தனது மனைவியுடன் பெரம்பூர் மேம்பாலத்திற்கும், ஐ.சி.எஃப் பகுதிக்கும், இடையே 10 மணி அளவில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு கும்பல் அவரது காரை வழிமறித்துள்ளது. காரில் இருந்து இறங்கிய எஸ்.பி யை தாக்கிய அந்த கும்பல், அவரது மனைவியிடம் இருந்த நகைகள், மற்றும் பணத்தினை பறித்துள்ளனர். எஸ்.பி.யும், அவரது மனைவியும், அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியிருக்கின்றனர். அதன் பிறகு, ஐ.சி.எப் போலீஸ் ஸ்டேஷனுக்கு எஸ்.பி தகவல் சொல்லியிருக்கிறார். உடனே, சம்பவ இடத்திற்கு இரண்டு வாகனத்தில் போலீசார் வந்துள்ளனர். அவர்களை கண்டும் அஞ்சாத ரவுடி கும்பல், அங்கு வந்த எஸ்ஐ உள்ளிட்ட காவலர்களை தாக்கியுள்ளனர். அந்த கும்பல் வைத்திருந்த பயங்கரமான ஆயுதங்களை கண்டு, தப்பித்தால் போதும் என்று போலீசார் ஓடியிருக்கிறார்கள். தப்பித்து ஓடிய போலீசார் கமாண்டோ படைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின், அதிகாலை 4 மணிக்குதான் கமாண்டோ படை அங்கு வந்துள்ளது. அதற்குள், அந்த ரவுடி கும்பல் அங்கு இருந்த எஸ்பி யின் காரை எடுத்துசென்றுவிட்டது. தற்போது, எஸ்.பி.யின் கார் மட்டும் கண்டுபிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய ரவுடி கும்பலை போலீசார் தேடிவருகின்றனர். இந்த சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!! 

பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: விபத்துக்குள்ளான காரை பார்த்து ஷாக்கான போலீசார்.!!

Advertisement


Get Newsletter

Seithipunal