ஆனது ஆகட்டும் முடிச்சரலாம்... இங்க நடந்தத தப்பி தவறிக்கூட வெளிய சொல்லி விட வேண்டாம்... பன்னீருக்கு மோடி போட்ட கண்டிசன்..? - Seithipunal
Seithipunal

இன்று பிரதமருடன் நடந்த சந்திப்பின் போது, ஆட்சி ரீதியாக முக்கிய முடிவுகளில் தனது பங்களிப்பு இல்லாத நிலை நீடிப்பதாகவும், இதனால் தன்னை நம்பிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் மோடியிடம் ஓபிஎஸ் சுட்டிக்காட்டியதாக சொல்கிறார்கள். மேலும் பல வெளிவராத தகவல்களையும் கூறி இருக்கின்றனர். இவை எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட மோடி, இப்போதைக்கு அரசுக்கு முழு ஒத்துழைப்பைக் கொடுங்கள். உங்களுக்குள் பிரச்னை இருப்பதாக வெளியே எந்த இடத்திலும் தெரியப்படுத்த வேண்டாம். எல்லாம் உரிய காலத்தில் சரியாக நடக்கும் என ஓபிஎஸ்சுக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறி இருக்கிறார் மோடி. மோடி சொல்லை தட்டாத பிள்ளை என்பதை நிரூபிக்கும் விதமாக, சந்தித்துவிட்டு வெளியே வந்த பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி எந்த வகையிலும் என்னை ஒதுக்கவில்லை. அவர் மூலமாக எனக்கு எந்த மன வருத்தமும் ஏற்படாது என பேட்டியளித்து இருக்கிறார். இதன் பின்னணியில் தான் உள்ளே ஒளித்திருக்கும் குமுறல்கள் அடங்கியிருக்கிறது. ஆனால், எதற்காக உங்கள் ஆதரவாளர்களை திரட்டிக்கொண்டு டெல்லி வந்தீர்கள்? ஏன் தங்கமணியை தவிர்த்துவிட்டு, மைத்ரேயனை அழைத்துச் சென்றீர்கள்?’ என்கிற கேள்விகளுக்கு கடைசி வரை வாயே திறக்கவில்லை.

தவறாமல் இதையும் படிச்சுருங்க..!!

“கொளுத்தி போட்ட பன்னீரால் கொந்தளிக்கும் அதிமுக.. அந்த பதினொன்னும் போயிட்டா என்ன ஆவது..? அக்டோபர் 27-ளோடு அதிமுகவின் ஆயிசு முடிகிறதா..?”
Advertisement


Get Newsletter

Seithipunal