கொளுத்தி போட்ட பன்னீரால் கொந்தளிக்கும் அதிமுக.. அந்த பதினொன்னும் போயிட்டா என்ன ஆவது..? அக்டோபர் 27-ளோடு அதிமுகவின் ஆயிசு முடிகிறதா..? - Seithipunal
Seithipunal

எடப்பாடி அரசின் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ. க்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி தினகரன் ஆதரவு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். ஆனால், அதன் மீது சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கொறடா உத்தரவுக்கு எதிராக நடந்து கொண்ட எம்.எல்.ஏ. க்கள் மீது தமிழக சட்டமன்ற விதிகள் 1986 ல் கூறப்பட்டுள்ள தகுதி நீக்கம் தொடர்பான பிரிவுப்படி, நடவடிக்கை எடுக்கும்படி, சபாநாயகர், சட்டமன்ற செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த  மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பதில் அளிக்க குறைந்தது மூன்று வாரங்கள் தேவை. எனவே விசாரணை நவம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதற்கு திமுக சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பதில் அளிக்க உத்தரவிடபட்டுள்ளது. எனவே விரைவாக பதில் அளிக்க உத்தரவிட வேண்டும் என கூறினார். இது தொடர்பாக, சபாநாயகர், சட்டசபைச் செயலாளர் ஆகியோர் தங்கள் பதில் மனுவை அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal



கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->