கங்குலி அன்றே சொன்னது..? பாண்டியா திடீர் பரபரப்பு... இரசிகர்களுக்கு உருக்கத்துடன் நன்றி... வெளியான வீடியோவில் இருந்தது..? - Seithipunal
Seithipunal

இந்திய அணியில் தற்போது கோலிக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் ரசிகர்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர் இதுதான். இவரது அதிரடி சிக்ஸர்களுக்கும், ஆல் ரவுண்டர் திறமைக்கும் தினம் தினம் ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். பலரும் இவரை இந்தியாவின் அடுத்த கபில்தேவ் என்று அழைக்கத் தொடங்கினர். இதற்கு பதிலளித்த முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, இப்போதைக்கு பாண்ட்யாவை கபிலுடன் ஒப்பிடுவது தவறு. பாண்ட்யாவை நாம் சுதந்திரமாக விளையாட அனுமதிக்க வேண்டும். இதுபோன்று எல்லாம் சொல்லி அவரை நெருக்கடிக்கு ஆளாக்கக் கூடாது என்றார். அதை பின்பற்றியே தனது திறமைகளை எந்த வித நெருக்கடியும் இன்றி வெளிப்படுத்தி வருகிறார். ஹர்திக் பாண்ட்யாவை ட்விட்டரில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியுள்ளது. இதுகுறித்து, ஹர்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ட்விட்டரில் எனது பாலோயர்களின் எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியிருப்பது மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யமாக உள்ளது. எப்போதும் என் பின்னால் இருந்து நீங்கள் என்னை வழிநடத்துகிறீர்கள். நீங்கள் எனக்கு அளிக்கும் இந்த அளப்பறியா அன்பு, என் வாழ்நாள் முழுவதும் கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி. உண்மையில் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது. இதுபோன்று தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள். இந்திய அணிக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்” என்று கோரியுள்ளார். [embed]https://twitter.com/hardikpandya7/status/917261020506185728[/embed]    
Advertisement


Get Newsletter

Seithipunal